News December 13, 2025

விரைவில் ஜனநாயகன் டீசர்?

image

ஜன.9-ல் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச.27-ல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக படத்தின் 2-வது பாடல் & டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘தளபதி கச்சேரி’ மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், இப்படத்தின் பாடல்கள் தெறிக்கவிடும் விதமாக அமைந்துள்ளதாக அனிருத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Similar News

News April 10, 2026

திருப்பத்தூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

ஜன நாயகனில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா? அமீர்

image

கசித்திருக்கும் ஜன நாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தான் தங்களின் அரசியலா, எப்போது தான் மாறும் இந்த மனநிலை என அடுக்கடுக்கான கேள்விகளை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் எழுப்பியுள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட் வைரலான நிலையில், ஓர் இயக்குநரே லீக்கான காட்சியை பார்த்தது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News April 10, 2026

PM KISAN திட்டத்தின் ₹2,000.. மகிழ்ச்சியான அப்டேட் வந்தது

image

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) ஜூன் இறுதி (அ) ஜூலை தொடக்கத்தில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, விவசாயி அடையாள எண் (UNIQUE FARMER ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பெறாதவர்களுக்கு ₹2,000 நிறுத்தப்படலாம். மாநில அரசின் <>அக்ரிஸ்டாக் இணையதளத்தில்<<>> அப்ளை செய்து உடனே அடையாள எண்ணை பெற்றுக்கொள்ளுங்கள்.

error: Content is protected !!