News December 29, 2025
விரைவில் சென்னைக்கு வருகிறது IKEA

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பன்னாட்டு ஃபர்னிச்சர் நிறுவனம் தான் IKEA. ஏற்கெனவே இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இதன் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் சென்னையில் தன்னுடைய கடையை திறக்க முடிவு செய்துள்ளது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி என சென்னை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், IKEA-வின் வருகை ஃபர்னிச்சர் துறையில் மிகப்பெரிய சர்வதேச முதலீடாக அமையும்.
Similar News
News February 17, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 17, மாசி 5 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News February 17, 2026
EPS – நயினார் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

EPS நயினார் நாகேந்திரன் சந்திப்பில் முக்கியமாக மதுரையில் நடைபெற உள்ள NDA பொதுக்கூட்டம் பற்றியே ஆலோசிக்கப்பட்டதாம். இந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பது குறித்தும் அவர்களுக்கான தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டுள்ளது. மதுரை பொதுக்கூட்டத்துக்கு மோடி வரும் நிலையில், அதற்கு முன்பாகவே தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிடலாம் என்பதை நயினார், EPS-யிடம் வலியுறுத்தியுள்ளாராம்.
News February 17, 2026
மூட்டு வலியா? இந்த சட்னி சாப்பிடுங்க..

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். யூரிக் அமிலப் பிரச்சனையில் இருந்து விடுபட நெல்லிக்காய் சட்னி உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பொடியாய் நறுக்கிய நெல்லிக்காயை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் போட்டு அரைத்து கொள்ளுங்கள். விரும்பினால் இதில் ஒரு ஸ்பூன் எள்ளையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு எப்போதும் போல தாளித்தால் சூப்பரான நெல்லிக்காய் சட்னி ரெடி.


