News January 10, 2026
விருத்தாசலத்தில் களமிறங்க பிரேமலதா திட்டம்!

விஜயகாந்த் பாணியில் வரும் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் களமிறங்க பிரேமலதா தயாராகி வருகிறார். அதனைக் கருத்தில் கொண்டே கடலூரில் நேற்று அக்கட்சியின் மாநாடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2011 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனதை போல, பிரேமலதா வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று துணை முதல்வராவார் என LK சுதீஷ் பேசியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து?
Similar News
News January 22, 2026
நான் திமுகவிலா.. வெல்லமண்டி நடராஜன்

வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் இணையவில்லை. இதுகுறித்து பேசிய அவர், நான் திருச்சியில் தான் இருக்கிறேன். எனக்கு திமுகவில் சேரும் எண்ணம் இல்லை. OPS உடன் தொடர்ந்து பயணிப்பேன் என்று அவரது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுப்படுத்தினார்.
News January 22, 2026
தமிழகத்தில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஹாஸ்பிடல்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் நீர் தேங்காமல் தடுப்பது அவசியம்.
News January 22, 2026
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

மத்திய அரசு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ₹5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்குவதை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதனால், சொந்த தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


