News October 25, 2025

விருதுநகர்:5 வயது சிறுமி மீது இடிந்து விழுந்த சுவர்

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சேதுராயனேந்தலை சேர்ந்த ஆனந்தி 29. இவரது மகள் சமுத்திர 5.நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Similar News

News October 25, 2025

விருதுநகரில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 25, 2025

விருதுநகர்: ஆசை வார்த்தைகள் கூறி பல கோடி மோசடி

image

ராஜபாளையம் சேத்தூர் அதிமுக நிர்வாகி பட்டுராஜன்(52,) அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) உள்ளிட்ட சிலர் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் மூவரையும் கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

News October 25, 2025

விருதுநகரில் 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!