News October 5, 2025
விருதுநகர்: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..
Similar News
News December 19, 2025
ஶ்ரீவி.,: பணம் மோசடி புகார்: கே.டி.ஆர் வழக்கு ஒத்திவைப்பு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜன.5.க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
விருதுநகர்: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <
News December 19, 2025
அருப்புகோட்டை அருகே கண்மாயில் மிதந்த சடலம்

அருப்புகோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி தெய்வேந்திரன், 54, இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. ஊருக்கு அருகில் உள்ள கண்மாயில் அவரின் டூவீலர் நின்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை கண்மாயில் தெய்வேந்திரன் மிதந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


