News August 6, 2025

விருதுநகர்: 64 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை

image

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். Share It.

Similar News

News August 7, 2025

விவசாயிகள் மானியத்தில் ஊட்டச் சத்து பெறலாம்

image

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி  ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50% மானியத்தில் ஊட்டச்சத்து பெற்று பயனடையலாம். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500  ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஆடி மாத ஏகாதசி முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News August 6, 2025

மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!