News January 11, 2026
விருதுநகர்: 3 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவி, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜா, நாகராஜன் மற்றும் குற்றப்பிரிவு DSP இளவரசன் ஆகியோர் வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
விருதுநகர்: VOTER ID ல இத மாத்தனுமா?

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 25, 2026
விருதுநகர்: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News January 25, 2026
சிவகாசி: பட்டாசு ஆலை அதிபர் கைது

சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நாரணாபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் முழுமையடையாத பட்டாசுகள் அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் வந்த பட்டாசு ஆலையின் அதிபர் வெங்கடேஷ் (35), சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


