News September 11, 2025
விருதுநகர்: 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

காரியாபட்டி அருகே திருமால், சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி ராஜலெட்சுமி (22) பிரசவத்திற்காக காரியாபட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸை நிறுத்தி ஊழியர்கள் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர்.
Similar News
News September 11, 2025
விருதுநகர்: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News September 11, 2025
விருதுநகர்: மரத்தில் மோதி நொறுங்கிய கார்-தம்பதி பலி

விருதுநகர் மாவட்டம், சிவகிரியை சேர்ந்தவர் வசந்தி இருவரது இல்ல விழாவிற்கு அவரது பெற்றோர் மாரியப்பன்,மாய கிருஷ்ணம்மாள் அவர்களின் மூத்த மருமகள் விஜயபாரதி உள்ளிட்ட 7 பேர் தேனியிலிருந்து சிவகிரி வந்தனர். பின், நேற்று முன்தினம் இரவு, சிவகிரியிலிருந்து ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை மாதரை கிராமம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், புளிய மரத்தில் மோதி மாரியப்பன், மாயகிருஷ்ணம்மாள் இறந்தனர்.
News September 11, 2025
விருதுநகரில் 24 வது நாளாக தொடரும் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் முன்பு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் 24 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்.