News September 22, 2025
விருதுநகர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
Similar News
News September 23, 2025
சிவகாசியில் தடையை மீறி தொடரும் பட்டாசு விற்பனை

சிவகாசியில் தீபாவளிக்கான பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை, விளம்பரத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்து மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் இந்த உத்தரவை மீறி ஏராளமான பட்டாசு விற்பனையாளர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
News September 22, 2025
BREAKING விருதுநகர்: உதயநிதி ஸ்டாலின் வருகையில் மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு வருகை தர இருந்தார். இந்நிலையில் ஒரு சில காரணங்களுக்காக அவரது வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் நாளை காலை விருதுநகர் வரும் துணை முதல்வருக்கு மதுரை – விருதுநகர் நெடுஞ்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மற்ற நிகழ்ச்சிகளில் மாற்றம் ஏதும் இல்லை.
News September 22, 2025
விருதுநகர் பட்டாசு விபத்தில் அதிர்ச்சி தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் 2011 – 2024 வரை 14 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் 379 பேர் உயிரிழந்த நிலையில் 320-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில், 2012-ம் ஆண்டு செப்.5 முதலிபட்டி விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இன்று மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.