News February 25, 2026
விருதுநகர்: வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கா..? இது கட்டாயம்

விருதுநகர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.
Similar News
News February 26, 2026
BREAKING: விருதுநகர்: EX அமைச்சர் வழக்கில் உத்தரவு

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தனது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்கவும், வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் இனி மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெறலாம் என உத்தரவிட்டுள்ளது.
News February 26, 2026
விருதுநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

விருதுநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரன் சூலக்கரைக்கும், வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும், செல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சாத்தூருக்கும், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஸ்ரீவி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
News February 26, 2026
சிவகாசி: வாளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த இருவர் கைது

சிவகாசி மணிநகரை சேர்ந்த மந்திர குமார் என்கிற குள்ளமணி(24) கையில் வாளுடன் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து இவரை கைது செய்த டவுன் காவல்நிலைய போலீசார் வாளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கையில் வாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சிவன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தத்தை (24) போலீசார் கைது செய்தனர்.


