News December 25, 2025
விருதுநகர்: வீடுகட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி

பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு அரசாங்கம் ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதில் முழுத் தொகையும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நிரந்தர வீடு இல்லாதவர்கள், வீடற்றவராகவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள் Aawas Survey App ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 26, 2025
விருதுநகர் பெண்களே ரூ.1000 வரலையா ? – CLICK HERE…!

விருதுநகர் மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
இந்த தகவலை தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 26, 2025
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி, சங்கரேஸ்வரி ஆகியோர் நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு பின் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உராய்வு ஏற்பட்டு நடந்த வெடி விபத்தில் இரு பெண்களும் காயமடைந்து விருதுநகரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 26, 2025
விருதுநகர்: 5 பேர் மீது பாய்ந்த போக்சோ

ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாரிச்சாமிக்கு 16 வயது சிறுமியை இவரது தாய் பொன்னுத்தாய், சகோதரர் அசோக் , அண்ணி கௌசி, மாமியார் மாரித்தாய் ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்தததையடுத்து வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தத்தில் உண்மை என தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


