News February 24, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

செண்பகத்தோப்பு ராம்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்திரபாண்டியன் – மதுபாலா தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரபாண்டியன் கூமாபட்டியில் வசித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி மனைவியை பார்த்துவிட்டு வந்து சுரேந்திரபாண்டியன் விஷம் குதித்துள்ளார். உடனடியாக ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News February 26, 2026

BREAKING: விருதுநகர்: EX அமைச்சர் வழக்கில் உத்தரவு

image

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தனது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்கவும், வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் இனி மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெறலாம் என உத்தரவிட்டுள்ளது.

News February 26, 2026

விருதுநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

விருதுநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரன் சூலக்கரைக்கும், வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும், செல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சாத்தூருக்கும், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஸ்ரீவி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News February 26, 2026

சிவகாசி: வாளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த இருவர் கைது

image

சிவகாசி மணிநகரை சேர்ந்த மந்திர குமார் என்கிற குள்ளமணி(24) கையில் வாளுடன் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து இவரை கைது செய்த டவுன் காவல்நிலைய போலீசார் வாளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கையில் வாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சிவன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தத்தை (24) போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!