News December 31, 2025
விருதுநகர்: விபத்தில் சிக்கி கவுன்சிலர் பரிதாப பலி

சாத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக தெய்வானை (55) இருந்து வந்தார். இவர் நேற்று டூவீலரில் தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை பள்ளத்தில் டூவீலர் தடுமாறியதில் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
விருதுநகர்: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

விருதுநகர் மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News January 6, 2026
விருதுநகர் அருகே மதுபானக் கூடத்தில் பணம் திருட்டு

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கோபி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். கோபி மதுபானக் கூடத்தை பூட்டிவிட்டு காலையில் வந்து பாா்த்தபோது பூட்டை உடைத்து ரூ. 6000 திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 6, 2026
விருதுநகர்: நீதிமன்றம் அருகே கஞ்சா விற்பனை

ராஜபாளையம் நீதிமன்றம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஆவாரம்பட்டி தெருவை சேர்ந்த புவனேஸ்வரன் 20, மாதவ ராஜா 25, இருவரிடம் சோதனையில் தலா 100 கிராம் அளவுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை கைப்பற்றி கைது செய்து தப்பி ஓடிய ஒத்தப்பட்டி தெருவை சேர்ந்த பூவரசன் 23, என்பவரை போலீசார் தேடுகின்றனர்.


