News September 11, 2025

விருதுநகர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

விருதுநகர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

Similar News

News September 11, 2025

தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்.13,14 அன்று 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் இனிவரும் மாதங்களில் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்படி திட்டப் பணிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

News September 11, 2025

விருதுநகர்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

image

விருதுநகர், விளாம்பட்டி சுப்பிரமணிபுரத்தை சேர்ந்த வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் வன்கொடுமை குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‌வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். ‌குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என SP கண்ணன் எச்சரித்துள்ளார்.

News September 11, 2025

விருதுநகர்: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!