News September 2, 2025

விருதுநகர்: வங்கியில் வேலை அறிவிப்பு

image

கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News September 2, 2025

தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்

image

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

News September 2, 2025

ஶ்ரீவில்லிபுத்தூரில் குப்பை கிடங்கில் தீ

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பையை முழுமையாக தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் கரும் புகை சூழ்ந்து சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 2, 2025

விருதுநகரில் இனி Whatsapp மூலம் தீர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!