News April 28, 2025
விருதுநகர் : முக்கிய திருவிழா எது தெரியுமா?

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய கோவில் நிகழ்வுகள், திருவிழாக்கள்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம்,
▶️சாத்தூர் பிரமோர்ச்சவம் , சித்திரா பெளர்ணமி விழா
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா
▶️விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா
▶️வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா
▶️அருப்புக்கோட்டை சொக்கநாதசுவாமி கோவில் திருவிழா
▶️திருச்சூழி பிரமோர்ச்சவம்
நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News November 2, 2025
விருதுநகர்: எச்சரிக்கை விடுத்த வனத்துறை

ஏழாயிரம்பண்ணை அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள், நில உரிமையாளர்கள் சட்டவிரோத மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மின்வேலி அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மின்வேலி இருந்தால் வனத்துறைக்கு தெரிவிக்க வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
News November 2, 2025
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள்

திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஐப்பசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
News November 2, 2025
விருதுநகர் அருகே கொலையா?

விருதுநகர் டி.சி.கே. பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(50). திருமணம் ஆகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த நிலையில் பஜார் போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். இவர் அடித்து கொலை செய்யப்படார? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தார என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


