News November 6, 2025
விருதுநகர்: மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் சட்டவிரோதமாக விவசாய தோட்டங்களில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். அக்.31 அன்று கோட்டைப்பட்டியில் முயல் வேட்டைக்கு சென்ற சுரேஷ் (45), இதேபோல் வேப்பிலைப்பட்டியில் மாயமான ரவிக்குமார் (40), சுரேஷ்குமார் (38), மின்வேலியில் சிக்கி பலியான நிலையில் சட்டவிரோத மின்வேலி அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News February 6, 2026
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 6, 2026
விருதுநகர்: கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உடல் நல பாதிப்பு மற்றும் கடன் பிரச்சனை இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்குள் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.