News March 21, 2025

விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Nurse, Medical Officer, Health Inspector என மொத்தமாக 8 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் 24-03-2025. 10th, B.Sc, Diploma, ITI, M.Sc, MBBS, MSW படித்த நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு<> லிங்கை<<>> செய்யவும் *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 11, 2025

பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் சிஎஸ்ஐ துவக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியிடை மரணம் அடைந்த முருகமணி என்பவரின் வாரிசுதாரராக அவரது மகள் எஸ்தர் சுகிர்தா என்பவருக்கு விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

News April 10, 2025

விருதுநகர் எழுத்தாளருக்கு விருது

image

பாரதிய பாஷா விருது என்பது இந்திய இலக்கியத்திற்கான பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் விருது. மேலும் இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். தற்போது இந்த விருதானது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2025

ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு நாளை திருக்கல்யாணம்

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக ஏப்.3 அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வீதி உலா வந்து வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனையடுத்து நாளை காலை 7.5 க்குசெப்பு தேரோட்டமும், மாலை 6.30 முதல் 7.30 க்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!