News August 12, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் செய்த செயல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.12) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பார்வதி என்பவர் தனக்கு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்யுமாறு மனு அளித்திருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்லூரி பயிலும் 2 மாணவிகளுக்கு மொத்தம் 6000 ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
Similar News
News October 17, 2025
சிவகாசி: பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி பகுதியில் பாரைபட்டி கிராமத்தில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மிஷின் திரி தயாரிக்கப்பட்டதும், ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டதும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிவகாசி போலீசார், சஞ்சீவ்பாபு, செல்வகுமார் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டுகள் சிறை

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (19). இவர் 15 வயது மாணவியிடம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். சிறுமிக்கு தாலி கட்டிய சதீஷ்குமார் கடந்த 2022-ம் ஆண்டு சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சதீஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News October 17, 2025
திபாவளிக்கு வழிமுறைகளை பின்பற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை விபத்து, ஒலி, மாசற்ற பண்டிகையாக கொண்டாடும் பொருட்டு பொதுமக்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு ஆட்சியர் சுகபுத்ரா அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலசங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.