News August 2, 2024
விருதுநகர் மாவட்டத்தை கண்காணிக்க ஆணை

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும்,மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
விருதுநகரில் ஆக.14ல் வேலை வாய்ப்பு முகாம்!

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <
News August 11, 2025
விருதுநகரில் வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஆக.14 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம்.
News August 10, 2025
விருதுநகரில் இனி குண்டாஸ் பாயும் என எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.