News March 21, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு அழைப்பு

image

விருதுநகர் எஸ்பி ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப் 23ல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவே மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்பமனுவை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் வரும் ஏப்.10க்குள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 4, 2026

விருதுநகர்: சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி.!

image

ஏழாயிரம்பண்ணை அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி குருசாமி (வயது 86). இவர் சாத்தூருக்கு வந்திருந்த நிலையில், கிருஷ்ணன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 3, 2026

விருதுநகர்: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2026

BREAKING சிவகாசி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அசோகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!