News February 12, 2026
விருதுநகர் மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இனைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகளை வழங்குகிறது. இப்பயிற்சிற்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த 18-35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்ததும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.20000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
Similar News
News February 13, 2026
சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு

சிவகாசி அருகே மாரனேரி போலீசார் காக்கிவாடன்பட்டி எஸ்.ஆர்.காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தகர செட்டில் சட்ட விரோதமாக ஷாட் வகை பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாரனேரி வரதகோபால்சாமிநகரை சேர்ந்த ரத்தினம் மகன் ஹேமத்ராஜன்(39) என்பவரை கைது செயதனர்.
News February 12, 2026
விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப் 13) நெல்லை, தென்காசி, தேனி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..
News February 12, 2026
விருதுநகர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.


