News September 16, 2025

விருதுநகர்: மாறி மாறி அரிவாளால் தாக்கிக் கொண்ட கொடூரம்..!

image

சிவகாசி பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி அவரது குடும்பத்திற்கு பணம் தராமல் உறவினர்களுக்கு செலவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவரது மகன் சுதாகர் கருத்தப்பாண்டியின் உறவினர்களான சந்தோஷ், சந்தியா ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சந்தோஷ், சந்தியா உள்ளிட்ட 4 பேர் சுதாகரை மீண்டும் அரிவாளால் தாக்கினர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 16, 2025

சாத்துார் அருகே விபத்தில் பெண் பலி; கணவர், குழந்தை படுகாயம்

image

கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மேசியார் தாஸ், இவர் மனைவி வனிதா, குழந்தை சஞ்சனா இவர்கள் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிய போது சாத்துார் – கோவில்பட்டி சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் வனிதா சம்பவ இடத்தில் பலியானார். கணவரும், குழந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News September 16, 2025

விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

image

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிவகிரி வனப்பகுதி தேவியாறு அருகே 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பரவியது. வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றும் கடும் வெயில், காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வேகமாக பரவி வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 16, 2025

விருதுநகர்: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இத்தகவலை உங்க FRIENDS க்கு SHARE பண்ணி உதவுங்க..!

error: Content is protected !!