News March 10, 2026

விருதுநகர்: மயானத்தில் பேரதிர்ச்சி சம்பவம்

image

விருதுநகரை சேர்ந்த தெய்வேந்திரன்(58), கரூரை சேர்ந்த ஆனந்தராஜ்(66) ஆகியோர் மதுரை G.H-ல் உயிரிழந்தனர். இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் முகத்தை கூட பார்க்காமல் உடலை வாங்கி சென்றுள்ளனர். விருதுநகர் மயானத்தில் முகத்தை பார்த்தபோது தான் உடல் மாறியது தெரியவந்தது. பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று அதிகாலை உடல்கள் மீண்டும் சரியான உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News March 11, 2026

விருதுநகர்: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

image

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News March 11, 2026

விருதுநகர்: பட்டாசு ஆலைகள் ஊரில் இருந்து UPSC சாதனை

image

விருதுநகர், ஆமத்தூரை சேர்ந்த வைஷ்ணவி, சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 492-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்தார். “நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்று 3-வது முயற்சியில் வெற்றி பெற்றார். பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள ஆமத்தூரில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் இவர். *SHARE

News March 11, 2026

சிவகாசியில் பரபரப்பு; சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

சிவகாசியில் 10 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் ரவீந்திரன்(52) தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டு வந்த சிறுமியிடம் அவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதை சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!