News October 8, 2025
விருதுநகர் மக்களே கேஸ் மானியம் வேண்டுமா?

விருதுநகர் மக்களே, உங்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியலையா? முதலில் ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். பின்னர் <
Similar News
News October 8, 2025
அருப்புக்கோட்டையில் பேருந்து கட்டணம் உயர்வு?

மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை – மதுரைக்கு ரூ.40 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வசூலிக்கப்படுகிறது. எலியார்பத்தி சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் புகார் எழுந்த நிலையில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News October 8, 2025
சிவகாசி டி.எஸ்.பி அதிரடி மாற்றம்!

சிவகாசி டி.எஸ்.பி பாஸ்கரன் தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிவகாசி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர் தற்போது விழுப்புரம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். சிவகாசிக்கு விரைவில் புதிய டி.எஸ்.பி நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 8, 2025
சிவகாசி நிர்வாகிகளை சந்தித்த மு.க. ஸ்டாலின்

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஜூன்.13 முதல் நேரில் சந்தித்து வருகிறார். அதில் நேற்று சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இதில் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.