News April 21, 2024
விருதுநகர்: மகள் மாயம்.. தந்தை புகார்
விருதுநகர் கந்தபுரம் பகுதியைச் சார்ந்தவர் சேதுராமசாமி (67). இவரது மகள் ஹரிப்பிரியா(27). இவருக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலை தட்டச்சு பயிற்சி செல்வதாக கூறிச் சென்ற ஹரி பிரியா தற்போது வரை வீடு திரும்பவில்லை. எனவே மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சேது ராமசாமி இன்று புகார் அளித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
விருதுநகரில் மழை தொடரும்!
விருதுநகர் உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
விடுமுறை: பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று(நவ.20) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
வரதட்சணை கொடுமை செய்த 8 பேர் மீது வழக்கு
சிவகாசி டி. மானகசேரியை சேர்ந்தவர் மாரிராஜ் சர்க்கரைத்தாய் தம்பதி. திருமணத்தின் போது 30 பவுன் நகை வரதட்சணையாக சர்க்கரைதாய் வீட்டினர் வழங்கிய நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் மாரிராஜ், அவரது பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்டோர் கொடுமை செய்துள்ளனர். மனஉளைச்சலடைந்த சர்க்கரைத்தாய் சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கணவர் மாரிராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.