News July 16, 2024
விருதுநகர் போலீசார் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்த வளாகத்தில் 2 வீடுகளில் நுழைந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்தபோது நடந்ததா? இல்லாவிட்டால் ஆளுநர் ஆர்என் ரவி அங்கு இல்லாதபோது நடந்ததா? என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இந்த நிலையில், போலீசார் வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளார்.
Similar News
News August 5, 2025
விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

▶️ டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000
▶️ இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348
▶️ மரு.க.பிர்தெளஸ் பாத்திமா எம்.டி. (சித்தா) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 9445008161
▶️ டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455
இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…
News August 5, 2025
மூடிய ஆலையை திறந்து பட்டாசு தயாரிப்பு

வெம்பக்கோட்டை புல்லக்கவுண்டன்பட்டி வாகினி பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையை போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் விஜய கரிசல்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (30), கருப்பசாமி (26) ஆகியோர் குருவி வெடி தயாரித்து கொண்டிருந்தனர். பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News August 4, 2025
சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரிப்பு

வெம்பக்கோட்டை அருகே கண்டியாபுரம் ஜே.பி., மித்ரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் ஆன நிலையில் சட்டவிரோதமாக இங்கு பட்டாசு தயாரிப்பு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு அறையில் பட்டாசுக்கான திரி தயாரிப்பது தெரிந்தது. போலீசாரை கண்டதும் இருவர் தப்பி சென்ற நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.