News May 3, 2024
விருதுநகர் பிளவக்கல் அணை சிறப்பு!
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான அணையாக இருக்கிறது பிளவக்கல் அணை. சிறப்புமிக்க இந்த அணை மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வெயிலை மட்டுமே பார்த்து வரும் கந்தக பூமி மக்களுக்கு இயற்கை வனப்புமிக்க இந்த பிளவக்கல் அணை ஒரு வரப்பிரசதமாய் விளங்குகிறது. இதன் அருகில் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த அணை ரூ.20 லட்சத்தில், 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
Similar News
News November 20, 2024
திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சப் டிவிஷன் டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் பொன்னரசு திருச்சுழி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
நவம்பர் 23ல் 450 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டம்
மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 23ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நடைபெறும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
மாவட்டத்தில் 79.40 மில்லி மீட்டர் மழை பதிவு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிவகாசியில் 10 மில்லி மீட்டர் மழையும், கோவிலாங்குளம் பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும், அருப்புக்கோட்டை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும், சாத்தூரில் 8 மில்லி மீட்டர் மழையும், திருச்சுழியில் 9.50 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.