News January 24, 2026
விருதுநகர் பாலியல் குற்றவாளிக்கு தண்டனை விதிப்பு

விருதுநகரை சேர்ந்த 53 வயதான நபர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக கடந்த 2024ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் & பாலியல் வன்கொடுமை குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யபட்டு நேற்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News January 30, 2026
ஆட்சியர் தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜன.30) மாவட்ட அளவிலான ஓய்வூதிய தாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் ஏழு மனுக்கள் தரப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்தார்.
News January 30, 2026
விருதுநகர்: நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், ஜி.என்.பட்டி, துலுக்கப்பட்டி, பெரியவள்ளிக்குளம், முடங்கியார், சிவகாசி இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இத்துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.
News January 30, 2026
விருதுநகர்: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


