News April 12, 2024
விருதுநகர்: பாஜகவிற்கு எதிராக சுவரொட்டி பரப்புரை

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஜிஎஸ்டி என்னும் நெருப்பின் மூலம் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை சிதறடித்த பாஜகவை எங்கள் ஆதரவு உங்களுக்கு இல்லை” இப்படிக்கு ஜிஎஸ்டி நலிவடைந்த பொதுமக்கள் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
News April 18, 2025
விருதுநகரில் SI பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஏப்.01 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி வகுப்புகள் ஏப்.23 முதல் ஆரம்பிக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News April 18, 2025
விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் செயல்படும் பிரபல ஜவுளி நிறுவனத்தில் டெய்லர், தரக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். வின்னப்பிக்க விரும்புவர்கள் இங்கே <