News October 15, 2025
விருதுநகர்: பள்ளி பேருந்து மோதி முதியவர் பரிதாப பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் 57. இவர் அமீர் பாளையத்தில் இருந்து சாலையை கடக்கும் போது அவ்வழியாக வந்த ராம்கோ பள்ளி பேருந்து மனோகரன் மீது மோதியதில் மனோகரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து குறித்து தாலுகா போலீசார் பேருந்து ஓட்டுனரான ஆனந்தபாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 2024ல் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போட்டோகிராபர் முருகேசன் (55) கைது செய்யப்பட்டார். இந்த போக்சோ வழக்கு ஸ்ரீவி. போக்சோ நீதிமன்றத்தில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 15, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கோரிக்கைகளாக வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
ஸ்ரீவி பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை

அசாம் மாநிலத்தை சேர்ந்த கமருதீன் இஸ்லாம் 2021ல் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தபோது உடன் வேலை செய்த பெண்ணுடன் பழகி பலாத்காரம் செய்தார். ஸ்ரீவி மகளிர் போலீசார் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி தப்பி சென்ற அவரை தனிப்படை போலீசார் அசாம் சென்று பதுங்கியிருந்த கம்ருதீன் இஸ்லாமை கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.