News January 16, 2026
விருதுநகர்: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News March 29, 2026
கவனம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர்; புதிய அறிவிப்பு!

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் போட்டியிடுவார் என சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுகவின் கூட்டணி கட்சியான CPI களமிறங்கும் நிலையில், திமுக,அதிமுக, தவெக, நாதக நான்கு முனை போட்டியில் தற்போது புதகவும் இணைந்துள்ளது.
News March 29, 2026
சிவகாசி தொகுதியில் பிரபல நடிகர் போட்டியா?

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ள சசிகலாவை நடிகர் கார்த்திக் நேரில் சந்தித்து அவரது தலைமையிலான அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நடிகர் கார்த்திக் சிவகாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 29, 2026
BREAKING விருதுநகர்: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
விருதுநகர் – செல்வம்
திருச்சுழி – சமயன்
அருப்புக்கோட்டை – கார்த்திக்குமார்
சாத்தூர் – அஜித்
சிவகாசி – கீர்த்தனா
ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி
ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) – கார்த்திக்


