News January 22, 2026
விருதுநகர்: த.வெ.க.,வில் இணைந்த EX கிராம நிர்வாக அலுவலர்

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்.
கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த இவர் தனது பணியை ராஜினாமா செய்து பா.ஜ.க.,வில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி நேற்று(ஜன.21) சென்னையில் த.வெ.க., பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அப்போது அருப்புக்கோட்டை த.வெ.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News February 6, 2026
விருதுநகர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

விருதுநகர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
BREAKING விருதுநகர் எம்.பி பதிவால் கூட்டணியில் மோதல்?

புதுச்சேரியில் கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகனிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியில் 8% ஓட்டுகளை வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளது கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
News February 6, 2026
ஸ்ரீவி: தனியார் பள்ளியில் முகமூடி திருடர்கள் கைவரிசை

ஶ்ரீவி – சிவகாசி சாலையில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த ரூ.70,000 திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த இருவர் திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசிரியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


