News March 27, 2024

விருதுநகர் தொகுதிக்கு இதுவரை 18 பேர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் தொகுதிக்கு தற்போது வரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காங்கிரஸ் தேமுதிக பாஜக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுயேச்சை மாற்று வேட்பாளர் உள்ளிட்ட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 11, 2025

விருதுநகர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

விருதுநகர் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov<<>>.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

image

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!