News April 21, 2025

விருதுநகர் தேர்தல் வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவு

image

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி விஜயபிரபாகரனும், தனக்கு எதிராக வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்க இன்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

விருதுநகர்:ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விருதுநகர் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 13, 2025

விருதுநகர்: புகார் தெரிவிக்க எண் வெளியீடு-கலெக்டர்

image

விருதுநகர் மாவட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் ஜெய பிரகாஷ் என்பவர் 8925811346 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

சிவகாசியில் கூடுதல் ஆய்வு குழு

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளது. விதிமீறலை கண்காணித்து தடுக்க ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 6ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இக்குழுவில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் இடம்பெற்றுள்ளனர்.

error: Content is protected !!