News March 22, 2024

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

image

தேமுதிக சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 2, 2025

விருதுநகரில் மாணவர்களுக்கான பேச்சு போட்டி

image

விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்றக் கூட்டரங்கில் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் டிச.4 மற்றும் டிச.5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.

News December 1, 2025

விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

image

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதால் மில் மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து இதுவரை புகார் அளிக்காத நபர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!