News February 19, 2026
விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 19, 2026
விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

ராயல் மெளஸி மில்க் டீ மற்றும் நியூ எரா ராயல் மெளஸி மில்க் டீ ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு கமிஷன் அடிப்படையில் அதிக பணம் திருப்பி கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிகமான அளவில் பணம் வசூல் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளார் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
BREAKING விருதுநகருக்கு மஞ்சள் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT
News February 19, 2026
விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


