News January 30, 2026
விருதுநகர்: சித்தப்பாவுக்கு 5 ஆண்டுகள் சிறை

விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது தாய் இறந்த நிலையில் பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு 36 வயதான அவரது சித்தப்பா பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதையடுத்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிறுமியின் சித்தப்பாக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News February 1, 2026
விருதுநகர்: 20 பவுன் தங்க நகைகள் திடீர் மாயம்

சிவகாசி தாலுகா சித்தமநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (70). இவர் தனது கணவர் உடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக ராஜபாளையத்திற்கு பஸ்சில் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. பயணம் செய்த இடத்தில் தேடியும் நகை கிடைக்கவில்லை. இதுகுறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
விருதுநகர்: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
விருதுநகரில் இனி Whatsapp மூலம் தீர்வு

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


