News August 12, 2025
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2550 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 விலை உயர்ந்து ரூ.5940 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.10 விலை உயர்ந்து ரூ.1900, ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7000 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 4, 2025
விருதுநகர்: 9 வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் ஆய்வு செய்து விதிகளை மீறி சென்ற மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு.
News November 4, 2025
விருதுநகர்: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 4, 2025
சிவகாசியில் ரூ.10 ஆயிரம் கோடி இலக்கு

சிவகாசியில் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி பாதிப்பால் பட்டாசுக்கான தட்டுப்பாடு நிலவியது. எனவே பட்டாசு தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்தாண்டு விரைவாகவே பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடந்த நிலையில் வரும் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி இலக்காக கொண்டு உற்பத்தியை துவக்கியுள்ளனர்.


