News April 21, 2025

விருதுநகர்: கோடையில் தவிர்க்க வேண்டிய ஆடைகள்

image

▶️செயற்கையான நூலிழைகளால் ஆன ஆடைகள் (Synthetic Fabrics)
▶️இறுக்கமான ஆடைகள் (Tight-Fitting Clothes)
▶️அடர் நிற ஆடைகள் (Dark-Colored Clothes)
▶️கனரக துணிகள் (Heavy Fabrics)
▶️ஃபிளிப் ஃப்ளாப்ஸ் (Flip Flops)
இந்த மாதிரியான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். இந்த ஆடைகள் வியர்வையை உறிஞ்சி, உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் தோல் எரிச்சலையும் உண்டாக்குகிறது. *ஷேர் பண்ணுங்க*

Similar News

News November 3, 2025

சாத்தூர்: கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

image

வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (63). கூலி தொழிலாளியான இவர் அருகில் உள்ள கோட்டை கண்மாயில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர். இதற்கிடையில் அவர் கண்மாயில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 3, 2025

விருதுநகர்: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 3, 2025

சாத்தூர் காராச்சேவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுமா?

image

சாத்தூர் என்றாலே பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது காராச்சேவு மற்றும் வெள்ளரிக்காய் தான். சாத்தூர் காராசேவு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. நூறாண்டுகளை கடந்த இந்த காராசேவுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!