News February 24, 2026

விருதுநகர்: கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் பெறுவது எப்படி…?

image

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News February 26, 2026

BREAKING: விருதுநகர்: EX அமைச்சர் வழக்கில் உத்தரவு

image

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தனது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்கவும், வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் இனி மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெறலாம் என உத்தரவிட்டுள்ளது.

News February 26, 2026

விருதுநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

விருதுநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரன் சூலக்கரைக்கும், வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும், செல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சாத்தூருக்கும், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஸ்ரீவி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News February 26, 2026

சிவகாசி: வாளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த இருவர் கைது

image

சிவகாசி மணிநகரை சேர்ந்த மந்திர குமார் என்கிற குள்ளமணி(24) கையில் வாளுடன் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து இவரை கைது செய்த டவுன் காவல்நிலைய போலீசார் வாளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கையில் வாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சிவன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தத்தை (24) போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!