News December 18, 2025
விருதுநகர்: காணமல் போனவர் சடலமாக மீட்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் நம்பியார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து சென்றவர் பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாங்குளம் கண்மாயில் அவர் இறந்து கிடப்பதாக இன்று தகவல் வந்த நிலையில் தற்போது அவரது உடலை கைபற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
Similar News
News December 18, 2025
விருதுநகரில் ஊர்காவலர் படை தேர்வு – SP அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் 20 ஊர்காவலர் காலி பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு டிச.27 அன்று காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் விரும்பமுள்ள ஆண்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-45 வயதிற்கு உள்ளவராகவும், சாதி, மதம், அரசியல், சங்கத்தில் உறுப்பினராக இருக்க கூடாது என மாவட்ட எஸ்பி கண்ணன் தெரிவித்துள்ளார். SHARE IT
News December 18, 2025
விருதுநகர் அருகே கண்மாயில் கிடந்த ஆண் சடலம்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மாங்குளம் கண்மாயில் இன்று டிசம்பர் 18 அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில் அவர் பாளையம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(54) என தெரிய வந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா வேறு ஏதேனும் காரணமா என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 18, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சி மொழி சட்டம் வரலாறு பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைமுறைகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் மாணவர்களுக்கு பட்டிமன்றம் ஒன்றியம் வட்ட அளவில் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி மொழி சட்டம் குறித்து விளக்கக் கூடம் நடைபெறும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்


