News December 5, 2025
விருதுநகர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்து வரும் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 16,13,476 கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் 11 வரை கணக்கெடுப்பு படிவங்களை பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
விருதுநகர் அருகே ரூ.15 லட்சம் மோசடி

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கீழக்கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பாண்டி, பெருமாளம்மாள், ஈஸ்வரி, ராணி, விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சூரியகலா ஆகியோர் போலி நகையை அடகு வைத்து ரூ.15.94 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சாத்துார் ஜே. எம் 2 நீதிமன்ற உத்தரவுப்படி வெம்பக்கோட்டை போலீசார் பாண்டியை கைது செய்து மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
விருதுநகர் சுகாதாரத்துறையில் வேலை ரெடி… APPLY NOW

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் புறத்தொடர்பு பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 6, 2025
விருதுநகர்: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

விருதுநகர் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <


