News June 4, 2024
விருதுநகர்: கட்சியை கலைத்தும் கலையாத கனவு

தேர்தலின்போது, தனது கட்சியை கலைத்த நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்ததோடு ஒரு சீட்டையும் பெற்றார். அதன்படி, கிடைத்த விருதுநகர் தொகுதியில் தனது மனைவி ராதிகாவை களமிறக்கினார். அவரை எம்பியாக்கும் கனவோடு தீவிரமாக களமாடினார் சரத்குமார். ஆனால், வாழ்வில் நாம் நினைக்கும் அனைத்தும் உடனே கிடைத்துவிடுவதில்லை. அதற்கு சரத்குமாரும் விதிவிலக்கல்ல! ‘விருதுநகரில் win’ என்ற இலக்கு தற்போது கலையாத கனவானது.
Similar News
News October 13, 2025
விருதுநகர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை! நாளை கடைசி

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10 முதல் டிகிரி வரை படித்தவர்கள் <
News October 13, 2025
விருதுநகர்: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 13, 2025
ராஜபாளையத்தில் கடித்து குதறிய கரடி

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்து(45) ராஜபாளையத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள நிலாப் பாறை காட்டுப்பகுதியில் காவலர்களுடன் ரோந்து சென்ற போது கரடி ஒன்று இவரை தாக்கி தொடைப்பகுதியில் கடித்து குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டிய நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.