News February 6, 2026

விருதுநகர்: கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

image

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உடல் நல பாதிப்பு மற்றும் கடன் பிரச்சனை இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்குள் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News February 8, 2026

சாத்தூர் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை

image

சாத்தூர் அருகே ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்தவர் ஜேசு மனைவி முத்துக்கனி(47). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 7, 2026

கல்குறிச்சி: தமிழ்நாடுதான் டாப் சூப்பர் ஸ்டார்; முதல்வர் பேச்சு

image

கல்குறிச்சி இளைஞரணி மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; எல்லா அரங்குகளிலும் தமிழ்நாடு தான் டாப் சூப்பர் ஸ்டார், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறியுள்ளதாக கூறினார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனைகளை தமிழகத்தில் 5 ஆண்டுகளில் செய்திருப்பதாகவும் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தற்போது NDA பழனிசாமியாக மாறியிருப்பதாக EPS யை விமர்சித்து பேசினார்.

error: Content is protected !!