News December 13, 2025

விருதுநகர் ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு.!

image

விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஊர்காவலர் காலி பணியிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் நிலையில் மதிப்பூதியமாக ரூபாய் 560 வழங்கப்படுகிறது.

Similar News

News April 8, 2026

விருதுநகர்: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <>CLICK<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News April 8, 2026

விருதுநகர்: டிராக்டர் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் பலி.!

image

நரிக்குடி அருகே உள்ள ஒட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (28). இவர் அப்பகுதியில் நேற்று டிராக்டரில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தவறி விழுந்துள்ளார். இதில் லட்சுமணனின் கால் ரொட்டேட்டர் எந்திரத்திற்குள் சிக்கியது. இதில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.! .

image

வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், மருத்துவர்கள் மது குடிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் வீட்டில் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!