News September 5, 2025

விருதுநகர்: ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

image

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnuwwb.tn.gov.in மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 12, 2025

BREAKING: ஸ்ரீவி., போத்தீஸ் கடையில் ஐடி ரெய்டு

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .நுழைவாயில்கள் பூட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் கடையின் இருப்பு, விற்பனை ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளை ஆய்வு செய்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

விருதுநகர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

விருதுநகர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கு கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 12, 2025

சிவகாசியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் ராஜ்(45). இவர் மாரனேரி பர்மா காலனியில் மினரல் வாட்டர் பிளான்ட் நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சய்குமார்(19) தனது தந்தையின் மினரல் வாட்டர் பிளான்டுக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டாரை ஆப் செய்ய சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!