News March 21, 2024

விருதுநகர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். இது போன்ற நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது என்பதால் காலம் தாழ்த்தாமல் துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News August 21, 2025

விருதுநகர்: காவல்துறையில் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News August 21, 2025

விருதுநகர்: இன்று போக்குவரத்தில் மாற்றம்

image

தவெக மாநாட்டை முன்னிட்டு இன்று போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர் செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாகவும், விருதுநகர் செல்லும் பொதுமக்கள் ராம்நாடு ரிங்ரோடு, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம். மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு அருப்புக்கோட்ட நகருக்குள் செல்ல அனுமதி இல்லை.

News August 20, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார் 

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

error: Content is protected !!