News February 19, 2026

விருதுநகர்: அ.தி.மு.க., 3-வது இடம்தான் – மாணிக்கம்தாகூர்

image

தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல் அமித்ஷா நடிக்கலாம். ஆனால் சர்வே முடிவுகள் எல்லாம் அவர் மேஜையில்தான் இருக்கும் அல்லவா?. அதனால் தான் டெல்லி மேல்சபைக்கு காலியாகும் MP தேர்தலை தமிழகத்தில் முன்கூட்டிய நடத்த அவசரம் வந்துள்ளது. 2026-ல் அ.தி.மு.க., 3-ம் இடம் என்பது இப்போது அதிர்ச்சி செய்தி அல்ல பொதுவாக அரசியல் உண்மை ஆகி கொண்டிருக்கிறது என விருதுநகர் MP மாணிக்கம்தாகூர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News February 19, 2026

விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

image

ராயல் மெளஸி மில்க் டீ மற்றும் நியூ எரா ராயல் மெளஸி மில்க் டீ ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு கமிஷன் அடிப்படையில் அதிக பணம் திருப்பி கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிகமான அளவில் பணம் வசூல் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளார் தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

BREAKING விருதுநகருக்கு மஞ்சள் அலர்ட்

image

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

News February 19, 2026

விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

error: Content is protected !!