News January 20, 2026
விருதுநகர்: அ.தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

அ.தி.மு.க., மாநில மாணவர் அணி துணை செயலாளராக நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மச்ச மணிகண்டன் கடந்த ஒரு சில மாதங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஓரிரு மாதத்திலேயே அவரது பதவியை பறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகார பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று முதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
விருதுநகர்: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
விருதுநகரில் இனி Whatsapp மூலம் தீர்வு

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.!

விருதுநகர் மாவட்டத்தில் நாளை வள்ளலார் தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒருநாள் தற்காலிகமாக மூடப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


